ரத்த வெள்ளத்தில் சரிந்த காதலி | தலைமறைவான காதலன் | வெளியான அதிர்ச்சி காரணம்

x

ஆந்திராவில் பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்த காதலியை காதலன் குத்திக்கொன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோணசீமா மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான ஒலேட்டி புஷ்பா என்பவர், கணவரை பிரிந்து விஜயவாடாவிற்கு குடிபெயர்ந்தார். அங்கு மெக்கானிக்காக பணிபுரியும் ஷேக் ஷாம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் இருவரும் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது

ஒருகட்டத்தில் போதைப்பழக்கத்திற்கு அடிமையான ஷாம், 2 தினங்களுக்கு முன் குடிபோதையில் வீட்டிற்கு வந்து அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறி, புஷ்பாவை பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு வற்புறுத்தி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதற்கு புஷ்பா திட்டவட்டமாக மறுத்ததால், அவரை கத்தியால் குத்திவிட்டு ஷாம் தப்பியதாக போலீஸ் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் சரிந்த புஷ்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ள போலீசார், தலைமறைவான ஷேக் ஷாமைத் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்