கல்லூரி மாணவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் - தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டம்

ஹரியானாவில் கல்லூரி மாணவி சுட்டுக் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, தேசிய நெடுஞ்சாலையை மறித்து ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி மாணவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் - தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டம்
Published on

ஹரியானா மாநிலம் பல்லாப்கர் பகுதியில் கல்லூரி மாணவி ஒருவர் பட்டப்பகலில் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், 36 சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்றுதிரண்டு, பல்லாப்கரில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில், மாணவி நிகிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க ஒன்றிணைந்து போராட தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து, பல்லாப்கரில், தேசிய நெடுஞ்சாலையை மறித்து, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com