ஒரு சிறுமியை காப்பாற்ற.. பஸ்ஸையே மருத்துவமனைக்கு திருப்பிய டிரைவர்
கேரளாவில், பேருந்து பயணத்தின்போது உடல்நலக்குறைவு ஏற்பட்ட சிறுமியை ஓட்டுநர் மருத்துவமனைக்கே சென்று அனுமதித்ததை பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர்.
நிலம்பூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி, பேருந்தில் சென்றபோது திடீரென மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து, பயணிகளின் கோரிக்கையை ஏற்று, பேருந்து ஓட்டுநர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கே பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், ஓட்டுநரின் செயலுக்கு சக ஊழியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Next Story
