வெப் சீரிஸ் பார்த்து கடத்தலில் இறங்கிய கும்பல் - தெறித்த தோட்டா.. போலீசார் அதிரடி

x

உத்தப்பிரதேச மாநிலம் மதுராவில், 30 லட்சம் ரூபாய் கேட்டு கல்லூரி​ மாணவி கடத்தப்பட்ட சம்பவத்தில் பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கோட்வாலி Kotwali பகுதியைச் சேர்ந்த மாணவி, கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பாதது குறித்து அவரது தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே, கடத்திய மாணவியை விடுவிக்க 30 லட்சம் ரூபாய் கேட்டு ஒரு கும்பல் தொலைபேசி மூலம் மாணவியின் தந்தையை மிரட்டியுள்ளது. இதையடுத்து கடத்தப்பட்ட மாணவியை மீட்ட போலீசார், பின்னர் நடத்திய என்கவுன்ட்டரில் இருவரை சுட்டுப்பிடித்தனர். பெண் உட்பட 3 பேர் கொண்ட கும்பல், மாணவியை கடத்தியதும், வெப் சீரிஸ் ஒன்றை பார்த்துவிட்டு இதுபோன்ற குற்றச்செயலில் ஈடுபட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு, மாணவியை குடும்பத்தாரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்