போலீசார் கண்முன்னே பயங்கரமாக இரும்பு கம்பியால் தாக்கிக்கொண்ட கும்பல் - சிசிடிவி காட்சிகள்

x

புதுச்சேரியில் பாதை பிரச்சினை தொடர்பாக, இருதரப்பினர் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சேதராப்பட்டு பகுதியை சேர்ந்த வீர‌ராகவன் மற்றும் ஏழுமலை ஆகிய இருவரும் அட்டை தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகின்றனர். இவர்களது ஆலை உள்ள இடத்தில் பொதுப்பாதை விடுவதில் பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்திலும் ஏழுமலை புகார் அளித்துள்ளார். இந்நிலையில், நேற்று இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் எற்பட்டுள்ளது. அப்போது, அவர்கள் இரும்பு பைப்களைக் கொண்டு தாக்கிக் கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்