பிரியாணியில் கறித்துண்டுகள் இல்லாததால் கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு

பிரியாணியில் கறித்துண்டுகள் இல்லாததால் கடை உரிமையாளர்களை அரிவாளால் வெட்டிய சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரியாணியில் கறித்துண்டுகள் இல்லாததால் கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு
Published on

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பகுதியில் ஜாகிர் உசேன் மற்றும் அவரது மனைவி பானு ஆகியோர் அசைவ உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இவர்கள் கடைக்கு 4 பேர் கொண்ட கும்பல் வந்து பிரியாணி பார்சல் வாங்கிச் சென்றுள்ளனர்.

ஆனால் அதில் கறித்துண்டுகள் இல்லை என்பதால் ஆத்திரமடைந்த அவர்கள், மீண்டும் கடைக்கு வந்து ஜாகீர் உசேன் மற்றும் அவரது மனைவி பானுவை அரிவாளால் வெட்டிச் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யக் கோரி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com