Arrest | RBI | செல்லாத 2000 ரூபாய் நோட்டுகளை வைத்து விபூதி அடித்த கும்பல்.. தூக்கிய போலீசார்
பெங்களூருவில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்து பெரும் மோசடி நடத்திய கும்பலை ஹாலசுரு கேட் பகுதி போலீசார் கைது செய்தனர். அக்கும்பல் நோட்டுகளை இரட்டிப்பாக மாற்றி தருவதாக ஏமாற்றி, பழைய நோட்டுகளை பெற்று அவற்றின் எண்களை மாற்றி வங்கியில் பணம் பெற்றது தெரியவந்துள்ளது. இதேபோல இந்த நோட்டுகள் 2023ம் ஆண்டு ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்ற O, OO, OP, OU வரிசைத்தொடர் நோட்டுகள் என்பதும், குறிப்பிட்ட சிறப்பு எண் கொண்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டால் செல்வம் சேரும் என நம்பவைத்து, அந்த வரிசை நோட்டுகளை அச்சிட்டு பொதுமக்களை ஏமாற்றியதும் விசாரணையில் தெரியவந்தது. சுமார் 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி நோட்டுகளும், நோட்டுகளை மாற்ற பயன்படுத்திய உபகரணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
