Gambir | Sanju Samson | கம்பீர் உடனான உறவு.. மனம் திறந்த சஞ்சு
Gambir | Sanju Samson | கம்பீர் உடனான உறவு.. மனம் திறந்த சஞ்சு
Summary
கம்பீர் உடனான உறவு எப்படி? - மனம் திறந்த சஞ்சு சாம்சன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய தலைமைப் பயிற்சியாளருமான கௌதம் கம்பீர் உடனான தனது உறவு மிக நீண்டது என கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். கேரளா ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், டி20 உலகக் கோப்பை முடிந்ததுமே சச்சின் டெண்டுல்கர் தமக்கு அனுப்பிய குறுஞ்செய்தி மிகவும் உணர்ச்சி பூர்வமானது என்றும் உத்வேகம் அளிக்க கூடியதாக இருந்தது என்றும் தெரிவித்தார். அதோடு, கொல்கத்தா அணியில் தாம் இருக்கும்போது முதல்முறையாக கௌதம் கம்பீரை சந்தித்ததாகவும், அவர் உடனான உறுதியான பிணைப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
