சந்திர கிரகணத்தையொட்டி, ஆந்திராவில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில், இன்று இரவு கிரகண கால சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. பொதுவாக, அனைத்து கோயில்களிலும் கிரகண காலங்களில் நடை சாத்தப்பட்டு கிரகண சாந்தி அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்னரே சாமி தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிப்பார்கள். ஆனால் ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் மட்டும் கிரகண காலங்களிலும் பூஜை நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.