திருமணத்திற்கு பெண் கிடைக்காத விரக்தி - இளைஞர்கள் எடுத்த முடிவு
கர்நாடகாவின் மண்டியா மாவட்டம் ரள்ளிகா கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திருமணத்திற்கு பெண் கிடைக்காத விரக்தியில், தங்களுக்கு பிரம்மச்சாரி மடம் கட்டித்தர வேண்டும் என பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு மனு அளித்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைக் கேட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களும் அதிகாரிகளும் முதலில் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விஷயத்தை தாசில்தார் மற்றும் பிடிஓ கவனத்துக்கு கொண்டு செல்வதாக பஞ்சாயத்து தெரிவித்துள்ளது. விவசாய குடும்பத்தை சேர்ந்த தங்கள் மகன்களுக்கு யாரும் பெண் தர முன்வரவில்லை என பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Next Story
