"நாளை முதல் நிறுத்தம்" - அமெரிக்க வரி போர்... இந்தியாவின் அதிரடி முடிவு

அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை ஆக.25 முதல் தற்காலிக நிறுத்தம்

ஆகஸ்ட் 25 முதல் அமெரிக்காவிற்கான அனைத்து அஞ்சல் சேவைகளையும் நிறுத்தி வைப்பதாக இந்திய தபால் துறை அறிவித்துள்ளது.

அமெரிக்க இறக்குமதி விதிமுறைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்காவிற்கான பெரும்பாலான அஞ்சல் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

100 வரையிலான கடிதங்கள், ஆவணங்கள் மற்றும் பரிசுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெலிவரி செய்யப்படாத பார்சல்களைக் கொண்ட வாடிக்கையாளர்கள் பணத்தைத் திரும்பப் பெறுவார்கள் என்றும், சேவைகளை மீட்டெடுக்க இது செயல்பட்டு வருவதாகவும் தபால் துறை தெரிவித்துள்ளது.

வரி இல்லாத நுழைவுக்கு அனுமதிக்கும் நீண்டகால டி மினிமிஸ் விலக்கை நீக்கும் அமெரிக்காவின்

புதிய உத்தரவை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது, அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து சர்வதேச அஞ்சல் பொருட்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

புதிய அமெரிக்க விதிமுறைகளின்படி, கேரியர்கள் இப்போது இந்த வரிகளை சேகரித்து செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com