சாமானியன் முதல் மிடில் கிளாஸ் வரை.. நாடே கொண்டாடும் `தீபாவளி’ பரிசு -எப்போது கிடைக்கும்?
GST வரிக்குறைப்பு எப்போது அமலுக்கு வரும்?
நாட்டில் 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என்ற GST மட்டும் நடைமுறையில் இருக்கும் என GST கவுன்சில் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் நடைபெற்ற 56-வது GST கவுன்சில் கூட்டத்தில், 12 சதவீதம் மற்றும் 28 சதவீதம் வரி விகிதங்களை நீக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இனிமேல் "5 சதவீதம்,18 சதவீதம் என 2 ஜிஎஸ்டி வரி விகிதங்களோடு, சிறப்பு வரி விகிதம் என 3 வகையான வரி விகிதங்கள் இருக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 5 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 40 சதவீதம் ஜிஎஸ்டி வரி நடைமுறையில் இருக்கும் எனவும்.. 3வது வகையாக ஆடம்பர பொருட்களின் மீது 40 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த “புதிய ஜிஎஸ்டி வரி விகிதங்கள் வரும் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்“ எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
