"தொலைபேசி, தொலைக்காட்சி சேவை இலவசமாக வேண்டும்" - உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

ஊரடங்கு காலத்தில் தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி சேவைகளை இலவசமாக வழங்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
"தொலைபேசி, தொலைக்காட்சி சேவை இலவசமாக வேண்டும்" - உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
Published on

ஊரடங்கு காலத்தில் தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி சேவைகளை இலவசமாக வழங்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் மனோகர் பிரதாப் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஊரடங்கு உத்தரவு காரணமாக வீடுகளுக்குள் பொதுமக்கள் முடங்கியுள்ளதால், மக்கள் மன ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே, தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி சேவையை இலவசமாக வழங்க, மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com