Bikram Singh Majithia | மாஜி அமைச்சர் பிக்ரம் சிங் மஜிதியா அதிரடிகைது - பஞ்சாப்பில் பரபரப்பு

x

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சர் பிக்ரம் சிங் மஜிதியா கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சரும், சிரோமணி அகாலி தள மூத்த தலைவருமான பிக்ரம் சிங் மஜிதியாவின் அமிர்தசரஸில் உள்ள வீடு உள்ளிட்ட 25 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனையிட்டனர். இதில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் பிக்ரம் சிங் மஜிதியாவை பஞ்சாப் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். 2021 இல் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிக்ரம் சிங் மஜிதியா ஜாமினில் வெளியே இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்