உயிரை காத்த வனத்துறை - நன்றி சொன்ன யானை.. வியக்க வைத்த வீடியோ
ஒடிசா மாநிலம், ரூர்கேலாவில் பள்ளத்தில் விழுந்த காட்டு யானையை, ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். ரூர்கேலாவில் உள்ள காட்டுப் பகுதியில் பெண் யானை ஒன்று, 10 அடி பள்ளத்தில் விழுந்து, வெளியே வர முடியாமல் தவித்தது. தகவல் அறிந்த வனத்துறையினர், உடனடியாக அங்கு சென்று, ஜேசிபி உதவியுடன் அகலமாக பள்ளம் தோண்டி, யானையை வெளியேற்றினர். அந்த யானை வெளியே வந்த பிறகு, வனத் துறையினருக்கு நன்றி தெரிவிப்பது போல் சிறிது நேரம் நின்று விட்டு, காட்டுப் பகுதிக்குள் சென்றது.
Next Story