ஆட்டோ ஓட்டி வந்த நபரை கீழே இழுத்து போட்ட வனத்துறையினர் - பரபரப்பு
ஆட்டோ ஓட்டி வந்த நபரை, வனத்துறை அதிகாரி ஒருவர் வலுக்கட்டாயமாக ரோட்டில் இழுத்துப் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் தேக்கடி பகுதியில் தான், இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆட்டோ ஓட்டுனரான குமுளி தாமரை கண்டம் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் செக் போஸ்ட்டில் நின்று கொண்டிருந்த வனத்துறையினரை மதுபோதையில் ஆட்டோவை விட்டு ஏற்றுவதைப் போல வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில், சுற்றுலா பயணிகளை ஏற்ற வந்த அவரை, ஓடிக்கொண்டிருந்த ஆட்டோவில் இருந்து, வனத்துறை அதிகாரி ஜாகிர் உசேன் என்பவர் சட்டையைப் பிடித்து கீழே இழுத்துப் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
