இந்தியாவில் முதன் முறையாக ரயிலில் ATM மெஷின் - எந்த ரயில்னு தெரியுமா?
விரைவு ரயில்களில் ஏடிஎம் நிறுவும் திட்டம் சோதனை அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மன்மாடில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையம் வரை செல்லும் பஞ்சவடி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இந்த முயற்சி வெற்றிகரமாக நிறைவு பெற்றதை தொடர்ந்து, இனி அனைத்து ரயில்களிலும் படிப்படியாக ஏடிஎம் வசதி செய்து தரப்படும் என தெரிகிறது. முதல் கட்டமாக வடக்குமண்டல ரயில்வேயில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
Next Story