மிஷன் ககன்யானில் விண்வெளிக்குச் செல்ல திட்டமிடப்பட்ட இந்திய விண்வெளி வீரர்கள் எடுத்துச்செல்ல, உணவு தயாரிக்கப்பட்டுள்ளது. மைசூரில் உள்ள பாதுகாப்பு உணவு ஆராய்ச்சி ஆய்வகத்தால், முட்டை ரோல், வெஜ் ரோல், இட்லி, மற்றும் வெஜ் புலாவ் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. விண்வெளியில் இருக்கும் வீரர்கள் இதை சூடுபடுத்தி உண்ண, உணவு ஹீட்டர்களும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ககன்யானில் 3 பேர் விண்வெளிக்குச் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.