அணையில் இருந்து வெளியேறி பல அடி உயரம் பனிப்பாறை போல் நிற்பதால் திகிலில் மக்கள்

ஒசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேறும் நீரில் நுரைகள் பொங்கி செல்வதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கெலவரப்பள்ளி அணையிலிருந்து பாசனத்திற்காக திறந்து விடப்படும் வலது மற்றும் இடது புற கால்வாய்களில் பல அடி உயரத்திற்கு நுரைகள் பொங்கி மலை போல காணப்பட்டது. அதேபோல தென்பெண்ணை ஆற்றில் செல்லும் நீரிலும் அதிகப்படியான நுரைகள் பொங்கி சென்றது. குவியல் குவியலாக துர்நாற்றத்துடன் நுரைகள் செல்வதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்படும் தனியார் தொழிற்சாலை ரசாயன கழிவுநீரும் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com