வானில் பறக்கும் ராமர் காற்றாடி... கோலாகலமாய் தொடங்கிய திருவிழா

x

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்வதேச காற்றாடித் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இவ்விழாவை முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் தொடங்கி வைத்தார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள், தங்கள் நாட்டுக் கொடிகளை கையில் ஏந்தியபடி அணிவகுத்துச் சென்றனர். அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதை குறிக்கும் வகையில், ராமர் உருவம் பொறித்த காற்றாடிகள் உட்பட பல வண்ண காற்றாடிகள் இத்திருவிழாவில் இடம்பெற்றுள்ளன. முன்னதாக பார்வையாளர்களை கவரும் வகையில், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


Next Story

மேலும் செய்திகள்