விமான சேவை பாதிப்பு- மன்னிப்பு கோரிய இண்டிகோ

x

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டதற்கு பயணிகளிடம் அந்நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

புதிதாக நடைமுறைக்கு வந்துள்ள விதிமுறைகளுக்கு இண்டிகோ விமானிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், இண்டிகோ விமானங்களை இயக்க போதிய விமானிகள் இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், நேற்று 550 இண்டிகோ விமான சேவை நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டது. இதனால் டெல்லி, மும்பை, பெங்களூரு விமான நிலையங்களில் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

இந்நிலையில், இண்டிகோ நிறுவனம் இயல்பு நிலைக்கு திரும்புவது எளிதல்ல என அதன் சிஇஓ தெரிவித்துள்ளார். அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு இந்த நிலைமை நீடிக்கலாம் என்றும், பயணிகள் முறையாக சரிபார்த்துக் கொண்டு விமான நிலையம் வருமாறும் இண்டிகோ நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்