மீன் வளர்ச்சி கழக டீசல் விற்பனை நிலையத்திற்கு பூட்டு

நாகையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் டீசல் விற்பனை நிலையத்திற்கு மீனவர்கள் பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், ஒரே நாளில் 43 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மீன் வளர்ச்சி கழக டீசல் விற்பனை நிலையத்திற்கு பூட்டு
Published on

மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடந்த 14 ஆம் தேதி நாகை பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்களில் 340 விசைப்படகுகள், தடைக்காலம் முடிவடையும் முன்பாக கடலுக்கு சென்றுவிட்டதாக கூறி, மீன்வளத்துறை அதிகாரிகள், அபராதம் விதித்துள்ளனர். அவர்களுக்கு, டீசல் வழங்க மறுப்பு தெரிவித்த‌தாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்கள், தமிழ்நாடு மீனவளர்ச்சி கழக டீசல் விற்பனை நிலையத்திற்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டாவது நாளாக தொடரும் போராட்டத்தால், மற்ற மீனவர்களும் டீசல் நிரப்ப முடியாமல், மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை தொடர்கிறது. இதனால், ஒரேநாளில் மீனவர்களுக்கு 43 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com