கற்களில் சிக்கிய வலையை எடுக்க சென்ற மீனவர் அலையில் சிக்கி பலி
புதுச்சேரி வைத்திகுப்பம் கடற்கரை பகுதியில், மீனவர் செந்தில் என்பவர் கற்களின் நடுவே சிக்கிய வலையை எடுக்க முயன்ற போது நிலைதடுமாறி கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது.
அப்போது எழுந்த ராட்சத அலையில் சிக்கிய மீனவர் செந்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அருகிலிருந்த மீனவர்கள் அரை மணி நேரம் மேற்கொண்ட தேடுதல் பணியின் பின்னர் அவரது சடலத்தை மீட்டனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story
