செல்போன் டவரில் ஏறி மீனவர் தற்கொலை முயற்சி

செல்போன் டவரில் ஏறி மீனவர் தற்கொலை முயற்சி
x

காரைக்கால் கீழகாசாகுடிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் இவருக்கு திருமணம் ஆகி மனைவி பிரிந்து சென்ற நிலையில் பெற்றோர்கள் உடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள செல்போன் டவர் உச்சியில் ஏறி நின்று தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை மற்றும் போலிசார் ராஜசேகரை கிழே இறங்கி வர கூறிய நிலையில் ஒரு மணி நேரத்திற்கு பிறகு ராஜசேகர் மீட்கப்பட்டார். போலீசார் விசாரணையில் ஊர் பிரச்சனை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்த அவரை முதல் உதவிக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்