15வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் - 53 புதுமுகங்கள் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்பு

கேரள மாநிலத்தின் 15வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது
15வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் - 53 புதுமுகங்கள் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்பு
Published on

15வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் - 53 புதுமுகங்கள் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்பு

கேரள மாநிலத்தின் 15வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனின் பிறந்த நாளான இன்று, அம்மாநில சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் தொடங்கியுள்ளது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர். மொத்தமுள்ள 140 எம்.எல்.ஏ.க்களில், 53 பேர் புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தனிமைப்படுத்தலால் மூன்று எம்.எல்.ஏக்கள். இதில் கலந்து கொள்ளாத நிலையில், தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் மற்ற எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். நாளை சபாநாயகர் தேர்வு நடைபெற உள்ள நிலையில், இடது ஜனநாயக முன்னணி சார்பில் முன்னிறுத்தப்பட்டுள்ள எம்.பி. ராஜேஷ் சபாநாயகராக தேர்வு செய்யப்பட உள்ளார். 26 மற்றும் 27ம் தேதி விடுப்பு அளிக்கப்பட்டு, 28ம்தேதி ஆளுநர் ஆரிப் முகமது கான் உரை நிகழ்த்த, புதிய பட்ஜெட்டை நிதி அமைச்சர் பாலகோபால் தாக்கல் செய்யவுள்ளார். ஜுன் 14ம் தேதி வரை 14 நாட்களுக்கு சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com