நாயின் தலையில் பட்டாசு வெடிப்பு.. அதிர்ச்சிகர காட்சி
சமூக வலைத்தள மோகத்தில், நாயின் தலையில் வைத்து பட்டாசு வெடித்த நபரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஜெகதீஷ்புரா என்ற பகுதியில் இளைஞர் ஒருவர், நாயின் தலையில் பட்டாசை வைத்து வெடித்து, அதை தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ விலங்கு நல ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
Next Story
