பெட்ரோல் பங்கில் வெடித்து சிதறிய பட்டாசு | பதறிப் போன ஊழியர்கள்

x

கேரள மாநிலம், திருச்சூரில் பெட்ரோல் பங்கில் பட்டாசுகள் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் , சேலூர் பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பெட்ரோல் நிரப்புவதற்காக வந்த இரு சக்கர வாகன ஒட்டி, தனது வாகனத்தில், பட்டாசுகள் நிரம்பிய பையை மாட்டியிருந்தார். எதிர்பாராத விதமாக, பெட்ரோல் நிரப்புவதற்கு முன்பு பட்டாசுகள் வெடித்துச் சிதறி, அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நடக்கவிருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட நிலையில், வாகன ஓட்டி மீது கேரள போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்