Delhi Fire | பாலிதீன் தொழிற்சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த தீ - வானை முட்டிய கரும்புகை..
டெல்லியில் பாலிதீன் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். ரிதாலா Rithala மெட்ரோ நிலையம் அருகே அமைந்துள்ள இந்த ஆலையில் செவ்வாய்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்தது. சம்பவ இடத்தில் தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 3 பேர் காயமடைந்தனர்.
