"உரங்கள் உற்பத்தி அதிகரிப்பு" - உரம் தட்டுப்பாடு ஏற்படவில்லை

நாடு முழுவதும் உரங்கள் உற்பத்தியும், விநியோகமும் போதுமான அளவில் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது
"உரங்கள் உற்பத்தி அதிகரிப்பு" - உரம் தட்டுப்பாடு ஏற்படவில்லை
Published on

நாடு முழுவதும் உரங்கள் உற்பத்தியும், விநியோகமும் போதுமான அளவில் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது

இது தொடர்பாக, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்தகவுடா வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019-2020 ஆம் ஆண்டில் யூரியா உற்பத்தி 2 கோடியே 44 லட்சத்து 55 ஆயிரம் டன்னாக உள்ளது என தெரிவித்துள்ளார், இது முந்தைய ஆண்டில் 2 கோடியே 40 லட்சம் டன்னாக இருந்தது.

மேலும், கொரோனா காலத்திலும், நாடெங்கிலும் உரங்களின் உற்பத்தியும், விநியோகமும் போதுமான அளவில் இருந்ததாக குறிப்பிட்டுள்ள சதானந்த கவுடா நடப்பாண்டில் உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் மொத்த உரங்கள் உற்பத்தி கடந்த ஆண்டை விட 2 புள்ளி 79 சதவீதமும் Gfx card 5

யூரியா உற்பத்தி 8 புள்ள 4 சதவீதம் சதவீதம் அதிகரித்துள்ளதாக சதானந்த கவுடா கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com