Sabarimalai | சபரிமலையில் வரிசையில் நின்ற பெண் பக்தர் பரிதாப மரணம்

x

சபரிமலை அப்பாச்சி மேடு பகுதியில் நீண்ட நேரம் வரிசையில் நின்றிருந்த பெண் பக்தர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இவர் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த சதி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது உடல் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் செலவில் சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்படும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளார். சபரிமலையில், கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதுகிறது. வரிசையில் நிற்கும் பக்தர்களை தாண்டி சில பக்தர்கள் செல்வதால் அசாதரண சூழ்நிலை ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த, கூடுதலாக 200 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்