காலை கணவனின் நீண்ட ஆயுளுக்கு விரதம்.. மாலை விஷம் வைத்து கொன்ற மனைவி -மனதை கெடுத்த இடைப்பட்ட `மதியம்’

உத்தப்பிரதேச மாநிலம் கௌஷாம்பியில் கடந்த ஞாயிறன்று, கர்வா செளத் என்ற பண்டிகை கொண்டாடப்பட்டது. மனைவிகள், தங்கள் கணவர்களின் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்யும் இந்நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், மாலையில் உண்ணாவிரதத்தை நிறைவு செய்வதற்கு முன்பு, சைலேஷ்-சவிதா தம்பதியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சிறிது நேரத்திற்குப்பின் நிலைமை சரியானதும், சவிதா இரவு உணவை தயாரித்தார். அதில், விஷம் கலந்த மாக்ரோனியை பரிமாறிய சவிதா, அண்டை வீட்டாரைப் பார்க்கச் செல்வதாகக் கூறி அங்கிருந்து தப்பியுள்ளார்.

பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சைலேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இறப்பதற்கு முன் சைலேஷ், தனது மனைவி தனக்கு விஷம் கொடுத்ததாக குற்றம் சாட்டி வீடியோ பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்த புகாரின்பேரில் சவிதாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com