

நெல்லையில் கடந்த இரண்டு வருடங்களாக கடுமையான வறட்சியின் காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டது.இந்நிலையில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் உரங்களின் விலை உயர்ந்துள்ளது. 890 ரூபாய்க்கு விற்று வந்த பாக்டம்பாஸ் 940 ரூபாய்க்கும்,1265 ரூபாய்க்கு விற்று வந்த டிஏபி 95 ரூபாய் அதிகரித்துள்ளது, 50 கிலோவாக விற்கப்பட்டு வந்த யூரியா உரம் 25 கிலோவாக குறைக்கப்பட்டு 265 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,உரத்தின் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.