200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் 'டில்லி சலோ' அணிவகுப்புக்கு தயாராகி வரும் நிலையில், டெல்லி காவல்துறை இன்று தொடங்கி ஒரு மாதத்திற்கு தேசிய தலைநகர் முழுவதும் 144 தடை விதித்துள்ளது.
டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா வெளியிட்டுள்ள உத்தரவில், அரசியல், சமூகம் அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவும் எந்த ஒரு ஊர்வலம், ஆர்ப்பாட்டம், மாநாடுகள், நடைபயணம் மேற்கொள்வது, கூட்டுவது அல்லது பங்கேற்பது ஆகியவற்றுக்கு "முழுமையான தடை"விதிக்கப்படுகிறது
முன்னதாக, விவசாயிகள் அணிவகுப்பை முன்னிட்டு டெல்லியின் காஜிபூர், சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக எல்லைப் பகுதிகளில் காவல் துறையினர் தடுப்புகளை அமைத்துள்ளனர்
விவசாயிகளின் அமைப்புதலைவர்கள் இன்று மாலை 5 மணிக்கு மத்திய அரசை சந்தித்து, பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வதற்கான சட்டம் இயற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தி, அதன் முடிவுகளின் அடிப்படையில் டெல்லிக்கு செல்லவுள்ளனர்.