பிரபல நடிகைக்கு ஓராண்டு சிறை தண்டனை - "ஜாமின் கோரும் உரிமை கிடையாது" - நீதிமன்றம் அதிரடி

x

Karnataka | Ranya Rao | பிரபல நடிகைக்கு ஓராண்டு சிறை தண்டனை - "ஜாமின் கோரும் உரிமை கிடையாது" - நீதிமன்றம் அதிரடி

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யாராவுக்கு ஓராண்டு ஜாமினில் வெளிவராத பிரிவின் கீழ் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கா்நாடகம் மாநிலம் பெங்களூருக்கு துபாயில் இருந்து 12.56 கோடி ரூபாய் மதிப்பிலான 14.2 கிலோ தங்கத்தை கடத்தி வந்த ஐபிஎஸ் அதிகாரியின் வளர்ப்பு மகளான ரன்யா ராவை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்தனர். அவர் வீட்டில் நடத்திய சோதனையில் 2.67 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகை, ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில், அந்நிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ரன்யாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தண்டனை காலம் முழுவதும் ஜாமின் கோரும் உரிமை கிடையாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்