Mother Son Bond|``அம்மா காலுல விழுந்து மன்னிப்பு கேளுங்க’’ - கல்நெஞ்ச மகனுக்கு சுப்ரீம்கோர்ட் ரிவீட்

``அம்மா காலுல விழுந்து மன்னிப்பு கேளுங்க’’ - கல்நெஞ்ச மகனுக்கு சுப்ரீம்கோர்ட் ரிவீட்

``ஒழுங்கா போய் அம்மா காலுல விழுந்து மன்னிப்பு கேளுங்க’’ - தீர்ப்பு சாதகமாக வரும்னு நினைச்சு பகுமானமாக வந்த மகனுக்கு சுப்ரீம் கோர்ட் ரிவீட்

தாய் மற்றும் மகனுக்கு இடையேயான சொத்து தகராறு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தாயின் கால்களை தொட்டு வணங்கி பாவங்களுக்கு மன்னிப்பு கேட்குமாறு மகனுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. டெல்லியில் பெற்றோரின் வீட்டில் வாடகையின்றி தங்கியிருந்த மகனும், மருமகளும், பெற்றோரை கொடுமைப்படுத்தி வீட்டைத் தங்கள் பெயருக்கு மாற்ற வற்புறுத்தியுள்ளனர். இதுதொடர்பான வழக்கில் விசாரணை நீதிமன்றமும், டெல்லி உயர்நீதிமன்றமும் பெற்றோருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தன. ​இதை எதிர்த்து மகன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி, இந்து மதத்தில் தாயின் முக்கியத்துவத்தை மகனுக்கு நினைவூட்டினார்... மேலும், தாயிடம் மன்னிப்பு கேட்டு அவரது ஆசியைப் பெறுமாறு வாய்மொழி உத்தரவிட்டு, மனுவை முடித்து வைத்தார்

#mother #son #bonding #supremecourt ​#thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com