சிறையில், சசிகலாவிற்கு சிறப்பு வசதிகள் அளிக்கப்பட்டதாக புகார் - தினகரன் ஆதரவாளர் புகழேந்திக்கு சம்மன்

சிறையில், சசிகலாவிற்கு சிறப்பு வசதிகள் செய்ய லஞ்சம் வழங்கப்பட்டதாக பதிவாகியுள்ள புகார் தொடர்பாக, விளக்கம் அளிக்குமாறு தினகரன் ஆதரவாளர் புகழேந்திக்கு, கர்நாடக ஊழல் தடுப்பு துறை சம்மன் அனுப்பியுள்ளது.
சிறையில், சசிகலாவிற்கு சிறப்பு வசதிகள் அளிக்கப்பட்டதாக புகார் - தினகரன் ஆதரவாளர் புகழேந்திக்கு சம்மன்
Published on
பெங்களூரு பரப்பன அஹ்ரகார சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும், அதற்காக முன்னாள் காவல் துறை இயக்குநர் சத்யநாராயணா உள்ளிட்டோருக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டதாகவும், முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை நடந்து வரும் நிலையில், லஞ்ச புகார் குறித்து கர்நாடக மாநில ஊழல் தடுப்பு துறை விசாரணை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தினகரன் ஆதரவாளரான புகழேந்தியிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 29-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு புகழேந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com