அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் முகமூடி, ஹாண்ட் சானிடைசர் - மத்திய அரசு அதிரடி உத்தரவு

கொரோன வைரஸ் பரவலை அடுத்து முக கவசங்கள் மற்றும் கைகழுவும் சானிடைசர்களை மத்திய அரசு அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் கொண்டுவந்து உத்தரவிட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் முகமூடி, ஹாண்ட் சானிடைசர் - மத்திய அரசு அதிரடி உத்தரவு
Published on

கொரோன வைரஸ் பரவலை அடுத்து, முக கவசங்கள் மற்றும் கைகழுவும் சானிடைசர்களை, மத்திய அரசு அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் கொண்டுவந்து உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், முக கவசங்கள் மற்றும் ஹாண்ட் சானிடைசர்களை அதிக விலைக்கு விற்பனை செய்வது மற்றும் பதுக்குவது குற்றம் என தெரிவித்துள்ளது. இதனை மீறிபவர்கள் மீது அபராதம் அல்லது 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்துள்ள மத்திய அரசு, ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com