அசாமில் கனமழை, பிரம்மபுத்திராவில் வெள்ளப் பெருக்கு

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
அசாமில் கனமழை, பிரம்மபுத்திராவில் வெள்ளப் பெருக்கு
Published on
அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதேபோன்று மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கனமழையை அடுத்து அந்தேரி சுரங்கப்பாதை தண்ணீரில் மூழ்கியுள்ளதால் பொது மக்கள் மிகுந்த சிரமத்தை அடைந்துள்ளனர். மும்பை மாநகரின் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தானேவில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையில் ஒரு பெரிய மரம் கட்டடம் மீது சாய்ந்து விழுந்தது. ஆனால் இதானல் உயிரிழப்பு ஏதும் இல்லை என அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே தானே அருகே அம்பர்நாத் பகுதியில் உள்ள சிவாஜி சவுக் பகுதியில் மரம் ஒன்று ரிக்‌ஷா மீது விழுந்ததில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மும்பை உள்பட மாநிலம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com