மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு..? ராஜ்யசபா-ல் தீர்மானம் நிறைவேற்றம்
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிப்பது தொடர்பான தீர்மானம்,, விவாதம் எதுவுமின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதற்கும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.
Next Story
