வெடி விபத்தில் வெடித்து சிதறிய 6 பேர் உடல்கள்.. பயங்கர சம்பவம் | West Bengal

x

மேற்குவங்கத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டம், பதர்பிரதிமா prathar pratima என்ற கிராமத்தில் வெடி விபத்து ஏற்பட்டு, 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து, அதில் இருந்து தீ பரவியதில், எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதாகவும், அந்த வீட்டில் பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்பட்டு வந்ததாகவும் போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்