தடுப்பூசி போட்டுக்கொண்டவர் உயிரிழப்பு - விளக்கம் அளித்துள்ள சுகாதாரத்துறை

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கர்நாடகா மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த நிலையில்,இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர் உயிரிழப்பு - விளக்கம் அளித்துள்ள சுகாதாரத்துறை
Published on

கர்நாடகாவின் பெல்லாரி மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்தில் மூன்றாம் நிலை ஊழியராக பணிபுரிந்த 43 வயதான நாகராஜ் கடந்த 16ஆம் தேதி கோவிஷீல்ட் தடுப்பூசியை எடுத்துக் கொண்டார். கடந்த 2 நாட்களாக எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் இருந்த அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் அவர் கொரோனா தடுப்பூசியால் உயிரிழக்கவில்லை என கர்நாடக சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே அவருக்கு இருந்த நோய் தாக்கத்தின் காரணமாக திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவரது உடல் கூறு ஆய்வு மற்றும் ரத்தம் மாதிரிகள் தடயவியல் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com