திருப்பதியில் 120 கோடி ரூபாய் செலவில் 150 படுக்கை வசதிகளுடன் கூடிய இ.எஸ்.ஐ மருத்துவமனையை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்குவார் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், சித்தூர் மாவட்டம் மட்டுமின்றி ராயலசீமாவை சுற்றியுள்ள ஒரு லட்சம் தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ மூலமாக பயனடைய உள்ளதாக தெரிவித்தார்.