EPFO | PF Update | நீங்க என்ன வேல பாத்தாலும் சரி.. 100 சதவீதமாக உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு
வருங்கால வைப்பு நிதியிலிருந்து நூறு சதவீத சேமிப்பையும் பெற ஒப்புதல்
வருங்கால வைப்பு நிதியிலிருந்து நூறு சதவீத சேமிப்பையும் பெற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து குறிப்பிட்ட அளவிலான பணத்தை மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலை நீடித்ததால் பலரும் தேவைக்கு பணம் கிடைக்காமல் அவதி அடைந்து வந்தனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
அந்த வகையில் இபிஎஃப் திட்டத்தின்கீழ் பகுதியளவு பணத்தை எடுத்துக்கொள்வதை எளிமைப்படுத்தும் விதமாக 13 சிக்கலான அம்சங்களை 3 வகைப்பாட்டின்கீழ் கொண்டுவர முடிவுசெய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக கல்வி, உடல்நலக்குறைவு, திருமணம் போன்ற அத்தியாவசியத் தேவைகள், வீட்டுத் தேவைகள் மற்றும் பிரத்யேக சூழல்கள் என முன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
தற்போது இபிஎஃப்-இல் இருந்து திருமணம் மற்றும் கல்விக்கு 3 முறை பகுதியளவாக பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
புதிய நடைமுறையின்படி கல்வித் தேவைக்கு 10 முறையும், திருமணத்துக்கு 5 முறையும் பணத்தை எடுத்துக்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பகுதியளவு பணத்தை எடுத்துக் கொள்வதற்கான குறைந்தபட்ச சேவை 12 மாதங்களாக நிா்ணயிக்கப்படுகிறது. முன்பு பிரத்யேக சூழல்களின்போது பணத்தை எடுக்க காரணங்களை சமா்ப்பிக்க வேண்டிய நிலை இருந்தது.
தற்போது இந்த வகைப்பாட்டின்கீழ் பணத்தை எடுக்க எவ்வித காரணத்தையும் குறிப்பிடத் தேவையில்லை கூறிய என இபிஎஃப்ஓ, இந்த புதிய நடைமுறை மூலம் 7 கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவர் என தெரிவித்துள்ளது.
