Bribe || EPFO ||லஞ்சம் வாங்கிய இ.பி.எஃ.ப்.ஓ அலுவலர் கைது
ஒடிசாவில் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தை சேர்ந்த
அலுவலரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். கஞ்சம் மாவட்டம் பெர்ஹாம்பூரில், வருங்கால வைப்பு நிதி பிராந்திய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் மூத்த சமூக பாதுகாப்பு உதவியாளரான அனில் ரத் என்பவர், தனியார் நிறுவனத்தின் ஒப்புதலுக்காக புகார்தாரரிடமிருந்து 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது, சி.பி.ஐ. அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர்.
Next Story
