Enforcementdirectorate | Robinuthappa | ED ஆபீஸில் உத்தப்பா.. பரபரப்பில் கிரிக்கெட் உலகம்

x

ஆன்லைன் சூதாட்ட செயலி பண மோசடி வழக்கு தொடர்பாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்துவதன் மூலம், பண மோசடி நடைபெற்றதாக அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த ராபின் உத்தப்பா உள்ளிட்டோருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி, டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரான அவர், பல மணி நேர விசாரணைக்குப் பிறகு வீடு திரும்பினார்.


Next Story

மேலும் செய்திகள்