காயம் அடைந்த காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை
கேரள மாநிலம், அதிரப்பள்ளியில் தலையில் காயம் அடைந்து, பரிதவித்த காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. திருச்சூர் மாவட்டத்தில் உள்ள அதிரப்பள்ளியில், காட்டு யானை ஒன்று தலையில் காயம் ஏற்பட்டு தனியாக சுற்றி வந்தது. இதனை கண்காணித்து வந்த வனத்துறையின, யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்தனர். கால்நடை மருத்துவர் தலைமையிலான மருத்துவ குழுவினர் மூலம் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. தொடர்ந்து முனைத்தடம் கோவில் அருகே மயங்கி கிடந்த யானைக்கு, பூஸ்டர் டோஸ் கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
Next Story
