தேர்தல் தேதி : "மார்ச் 7ஆம் தேதி அறிவிக்க வாய்ப்பு" - பிரதமர் சூசகம்

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதியை, மார்ச் 7ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என பிரதமர் மோடி சூசகமாக தெரிவித்துள்ளார்...
தேர்தல் தேதி : "மார்ச் 7ஆம் தேதி அறிவிக்க வாய்ப்பு" - பிரதமர் சூசகம்
Published on

அசாம் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, 3 ஆயிரம் கோடி மதிப்பிலான எரிவாயு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.. இதையடுத்து அங்கு நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, 2016ஆம் ஆண்டில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை மார்ச்

4ஆம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டதாக கூறினார். இதே போன்று தற்போது மார்ச் 7-ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என தாம் எண்ணுவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். மேலும், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக அசாம், மேற்குவங்கம், புதுச்சேரி, தமிழ்நாடு, கேரள மாநிலங்களுக்கு முடிந்த அளவு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com