தேர்தல் ஆணையம் Vs ராகுல் காந்தி - மகாராஷ்டிரா தேர்தல் விவகாரம்.. அடுத்தடுத்து பரபரப்பு
மகாராஷ்டிரா 2024 சட்டமன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க தயார் என
தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் பதில் கடிதம் எழுதியுள்ளது. மகாராஷ்டிரா 2024 சட்டமன்றத் தேர்தல் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், இது தொடர்பாக நேரில் விவாதிக்க விரும்பினால் தேர்தல் ஆணையம் அதற்கு தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் அழைப்பை ஏற்ற விவாதத்திற்கு தயார் என காங்கிரஸ் செயல் குழு அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.மேலும், இந்தக் கடிதம் அனுப்பப்பட்ட நாளிலிருந்து ஒரு வாரத்திற்குள், மகாராஷ்டிரா வாக்காளர் பட்டியலின் டிஜிட்டல் நகலையும், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா தேர்தல் வாக்குப்பதிவின் வீடியோ காட்சிகளையும் தங்களுக்கு வழங்குமாறு காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது.
