Election Commission | தலைமை தேர்தல் ஆணையரை நீக்க கோரிய விவகாரத்தில் முக்கிய முடிவு

தலைமை தேர்தல் ஆணையரை நீக்க கோரிய விவகாரத்தில் முக்கிய முடிவு

தலைமை தேர்தல் ஆணையரை நீக்கக்கோரிய தீர்மானம் நிராகரிப்பு இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தை, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நிராகரித்துள்ளார். கடந்த மார்ச் 12-ஆம் தேதி, 130 எதிர்க்கட்சி எம்பிக்கள் இணைந்து இந்தத் தீர்மானத்தை வழங்கியிருந்தனர். இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நீதிபதிகள் விசாரணைச் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்ட இந்தப் புகார்களை சபாநாயகர் விரிவாக ஆய்வு செய்தார். இறுதியில், சபாநாயகருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்தத் தீர்மானத்தை ஏற்க அவர் மறுப்புத் தெரிவித்துவிட்டார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், சபாநாயகரின் இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com