Election 2026 | திறக்கப்பட்டதா ஓட்டு மெஷின்கள்? - வெடித்த பிரளயம்
திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டிற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் மேற்கு வங்கத்தில் வாக்குப்பெட்டிகள் திறக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. கொல்கத்தா குதிராம் அனுஷீலன் கேந்திராவில் உள்ள பாதுகாப்பு அறைகள் வேட்பாளர்கள் முன்னிலையில் முறையாக சீல் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன என்றும், விதிமீறல் எதுவும் நடைபெறவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அறைகளுக்கு வெளியே நடைபாதையில் தபால் வாக்குச்சீட்டுகளை பிரிக்கும் பணி மட்டுமே நடைபெற்றதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை குறித்து அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அனைத்து விவரங்களும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் மின்னஞ்சல் மற்றும் நேரில் தெரிவிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
